வீரபாண்டி ஒன்றியத்தில் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


வீரபாண்டி ஒன்றியத்தில் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T02:35:37+05:30)

வீரபாண்டி ஒன்றியத்தில் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

ஆட்டையாம்பட்டி,


வீரபாண்டி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் நேற்று நேரில் சென்று அரசுத்துறை திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் ஒருபகுதியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், சிமெண்டு இருப்பு அறைகள் மற்றும் அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுதவிர வேளாண்மைத்துறையில் உள்ள விதை இருப்பு விவரங்கள் மற்றும் நுண்ணூட்டம் இருப்பு, உயிர் உரங்கள் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் வேளாண்மைத்துறையில் மண்வள அட்டை வினியோக பணிகள் பற்றியும், பயனாளிகளிடம் உர பரிந்துரைப்படி உரம் இடப்படுகிறதா? என்பது பற்றியும் உரச்செலவு குறிப்பேட்டையும் கேட்டறிந்தார். அரியானூர் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குழந்தை தெரசா, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர்கள் தெய்வ சிகாமணி, சாலமன் ராஜூ, செல்வம், உமாராணி, வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஜெகதீஸ்வரன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story