4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T02:36:10+05:30)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு

கரூர்,

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

லாரி டிரைவர்

கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் மணிமாறன் (வயது44). லாரி டிரைவர். இவர் கடந்த 6.7.2015 அன்று அந்த பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து அவரது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்து கரூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்ததைதொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி குணசேகரன், குற்றம் சாட்டப்பட்ட மணிமாறனுக்கு, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், இவை அனைத்தும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து மணிமாறனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story