ராசிபுரத்தில் ஏ.டி.எம்.களில் அலைமோதும் மக்கள் கூட்டம்


ராசிபுரத்தில் ஏ.டி.எம்.களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T02:36:54+05:30)

ராசிபுரத்தில் ஏ.டி.எம்.களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ராசிபுரம்,

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து ராசிபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. ராசிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.கள் பெரும்பாலும் செயல்படுவதில்லை. பெயரளவில் மட்டுமே சில மணி நேரம் செயல்படுகிறது. ராசிபுரத்தில் திறந்திருக்கும் ஒருசில ஏ.டி.எம்.களில் வழங்கப்படும் ரூ.2 ஆயிரத்தை பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் ஏ.டி.எம்.கள் முன்பு காத்து கிடக்கின்றனர். மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நேரிடையாகவோ, ஏ.டி.எம். மூலமோ இன்னும் ராசிபுரத்தில் வழங்கப்படவில்லை. சில வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், அவை முக்கிய நபர்களுக்கு மட்டுமே மறைமுகமாக வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராசிபுரம் பகுதியில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களும் முழுமையாக செயல்பட வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story