கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T02:38:08+05:30)

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் இரண்டு இடங்களில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் கோலப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் கோலப்பன், வருவாய் ஆய்வாளர் அனந்த கோபால், மந்திர மூர்த்தி, ஓட்டுனர் இம்மானுவேல் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, சுற்றுலா பயணிகள் வந்த ஒரு வேனில் 25 மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதிகாரிகள், ரெயில் நிலைய சந்திப்பு பகுதிக்கு சென்ற போது, சாலையோரம் 2 மூடைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி கிடந்தது. அந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கியாஸ் சிலிண்டர்

பின்னர், அதிகாரிகள் கன்னியாகுமரி மேலரதவீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கியாஸ் சிலிண்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story