திருச்சியை தூய்மையாக வைக்க புதிய ‘செயலி’ குறித்து விழிப்புணர்வு: செல்போனில் பொதுமக்கள் ஆர்வமாக பதிவிறக்கம் செய்தனர்


திருச்சியை தூய்மையாக வைக்க புதிய ‘செயலி’ குறித்து விழிப்புணர்வு: செல்போனில் பொதுமக்கள் ஆர்வமாக பதிவிறக்கம் செய்தனர்
x
தினத்தந்தி 14 Dec 2016 11:00 PM GMT (Updated: 14 Dec 2016 9:24 PM GMT)

திருச்சியை தூய்மையாக வைக்க புதிய செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செல்போனில் பொதுமக்கள் ஆர்வமாக பதிவிறக்கம் செய்தனர். புதிய செயலி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ‘சுவாச்சதா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது செல்ப

திருச்சியை தூய்மையாக வைக்க புதிய செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செல்போனில் பொதுமக்கள் ஆர்வமாக பதிவிறக்கம் செய்தனர்.

புதிய செயலி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ‘சுவாச்சதா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள இந்த ‘செயலி’ மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் குப்பைகள் எடுக்க வாகனங்கள் வராதது, குவிந்து கிடக்கும் குப்பைகள், பொதுக்கழிப்பிடத்தில் தூய்மையின்மை உள்பட சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய புகார்களை இதில் புகைப்படத்துடன் பொதுமக்கள் பதிவிடலாம். பதிவு செய்த 12 மணிநேரத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இந்த ‘செயலி’ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வம்

இந்த நிலையில் புதிய ‘செயலி’ குறித்து காந்திமார்க்கெட்டில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜா, உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், பாலமருது உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ‘செயலி’ குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர். பொதுமக்களும் செயலியை பதிவிறக்கம் செய்தனர். அந்த செயலியை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர். இளைஞர், இளம்பெண்கள் அதிகமானோர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ததை காணமுடிந்தது.


Next Story