எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு முன்பே தெரியும் குமாரசாமி பேட்டி


எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு முன்பே தெரியும் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2016 9:46 PM GMT (Updated: 2016-12-15T03:16:22+05:30)

எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு முன்பே தெரியும் என்று குமாரசாமி கூறினார். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ஒரு மாதத்திற்கு முன்ப

பெங்களூரு

எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு முன்பே தெரியும் என்று குமாரசாமி கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஒரு மாதத்திற்கு முன்பே...

மந்திரி எச்.ஒய்.மேட்டி மீது செக்ஸ் புகார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வெளியானது. அப்போதே அவர் பதவியை ராஜினாமா செய்திருந்தால் அரசுக்கு அவமானம், இக்கட்டு ஏற்பட்டு இருக்காது. முதல்–மந்திரிக்கு இதுபற்றி முன்பே தெரியும். அவரும் அந்த சி.டி.யை பார்த்திருப்பார் என்று நான் கருதுகிறேன். போலீஸ் துறையில் கெம்பையாவை ஏன் வைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கடந்த ஒரு மாதமாக மாநிலத்தில் என்ன விஷயங்கள் நடந்துள்ளது. முதல்–மந்திரியின் செயல்பாடுகள் நகைப்புக்குரியவையாக உள்ளது. ஊழலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட லோக் அயுக்தா அமைப்பை இந்த அரசு நாசமாக்கிவிட்டது. 2 அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணை கமிஷன்

பா.ஜனதா ஆட்சியில் அதிகளவில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றன. இதற்கு இப்போது உள்ள காங்கிரஸ் தண்ணீர் மற்றும் உரம் போட்டு வளர்த்துள்ளது. அர்க்காவதி லே–அவுட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி கெம்பண்ணா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவதாக இருந்தால், நான் உள்பட 4 முன்னாள் முதல்–மந்திரிகளிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் நோட்டீசு கொடுக்கவே இல்லை. இந்த முறைகேட்டை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளது. ஊழல் ஒழிப்பு பற்றி எடியூரப்பா பேசுகிறார். அவருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகளவில் ஊழல் நடைபெற்றது.

எத்தினஒலே குடிநீர் திட்டம்

நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணித்துறையில் 10 சதவீத ‘கமிஷன்‘ பெறப்பட்டது எடியூரப்பா ஆட்சி காலத்தில் தான். வருமான வரித்துறையில் சிக்கியுள்ள அதிகாரி ஜெயச்சந்திரா நிதித்துறையின் ஒப்புதல் இல்லாமலேயே ரூ.3,500 கோடிக்கு திட்ட பணிகளுக்கு டெண்டருக்கு அழைப்பு விடுத்தார். இவர் அரசை விட பெரிய நபரா?

எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் பற்றி பா.ஜனதாவினர் பேசுகிறார்கள். இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்டத்திலும் ரூ.500 கோடி முறைகேடு நடைபெற்று உள்ளதாக சொல்லப்படுகிறது. மாநில மக்களின் வரிப்பணம் ஏதேதோ திட்டங்களின் பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவி செய்ய நிதி இல்லை என்று சித்தராமையா சொல்கிறார்.

எந்த தொடர்பும் இல்லை

உதவி கேட்க சென்றால் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று பிரதமரை சித்தராமையா குறை சொல்கிறார். இந்த அரசு செய்வது சரியா? வீரேந்திராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இவருக்கும், எங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story