காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி 77 மாடுகள் சாவு


காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி 77 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T03:25:13+05:30)

காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உள்பட்ட அத்திவாக்கம், சிங்காடிவாக்கம், சூரமேனிகுப்பம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த திங்கட்கிழமை மாடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள தென்னேரி ஏரியை ஒட்டிய பகுதிக்கு சென்றன. அன்றைய தினம் வார்தா புயல

வாலாஜாபாத்,

காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உள்பட்ட அத்திவாக்கம், சிங்காடிவாக்கம், சூரமேனிகுப்பம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த திங்கட்கிழமை மாடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள தென்னேரி ஏரியை ஒட்டிய பகுதிக்கு சென்றன. அன்றைய தினம் வார்தா புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற 77 பசுமாடுகள் வீடு திரும்பவில்லை.

மாடுகள் எங்கேயாவது தங்கியிருக்கும் என கிராம மக்கள் இருந்துவிட்டனர். அதன் பின்னர் மாடுகளை தேடியபோது மாடுகள் தென்னேரி ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அதிகாரிகளுடன் நேரில் ஆலப்பாக்கம் கிராமத்திற்கு சென்று இறந்த மாடுகளை பார்வையிட்டார். உயிரிழந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இழப்பீடு வழங்க ஆவன செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.


Next Story