பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் அரசு அறிவிப்பு


பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T03:45:01+05:30)

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வார்தா புயல் வார்தா புயல் கரையை கடந்தபோது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் வ

சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வார்தா புயல்

வார்தா புயல் கரையை கடந்தபோது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் விழுந்தன. மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன.

இதன் காரணமாக மாணவ–மாணவிகள் நலன் கருதி பள்ளிகளுக்கு 12–ந் தேதி விடுமுறை விடப்பட்டது. 13–ந் தேதி மிலாது நபி விழாவையொட்டி விடுமுறை. 14–ந் தேதியான நேற்றும் புயல் பாதிப்பு சீரடையாததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிடவும், அந்த பள்ளிகளில் உள்ள மரங்கள் விழுந்ததை அப்புறப்படுத்தும் பணிகளை கண்காணிக்கவும், பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்யவும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு இயக்குனர் ச.கண்ணப்பன் மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்படும்

இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

அதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.


Next Story