வார்தா புயல் காற்றில் ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் சேதம்


வார்தா புயல் காற்றில் ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T17:55:54+05:30)

வார்தா புயல் காரணமாக மேல்விஷாரம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பப்பாளி, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பப்பாளி மரங்கள் சாய்ந்தன வங்கக்கடலில் உ

வேலூர்,

வார்தா புயல் காரணமாக மேல்விஷாரம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பப்பாளி, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பப்பாளி மரங்கள் சாய்ந்தன

வங்கக்கடலில் உருவான வார்தா புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அடியோடி சாய்ந்தன. வேலூர் மாவட்டத்திலும் வார்தா புயலால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்விஷாரம் பகுதியில் வார்தா புயலால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இங்கு கவரப்பாளையம் பகுதியில் ஏக்கர் கணக்கில் பப்பாளி பயிரிடப்பட்டுள்ளது. நன்கு காய்கள் காய்த்து அறுவடைக்கு தாயாராக இருந்த நேரத்தில் கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட புயல் காற்றில் இங்கு பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது.

நஷ்டஈடு வழங்க வேண்டும்

காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மரங்கள் சாய்ந்து விட்டதால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதேபோன்று இந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் புயல்காற்றில் சாய்ந்துவிட்டன. ஆயிரக்கணக்கில் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த பப்பாளி மற்றும் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story