தண்டராம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு


தண்டராம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T18:05:22+05:30)

‘வார்தா’ புயலால் தண்டராம்பட்டு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன. அதனை திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் தண்டராம்பட்டு மற்றும் அ

தண்டராம்பட்டு,

‘வார்தா’ புயலால் தண்டராம்பட்டு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன. அதனை திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்

தண்டராம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள வீரணம், மலமஞ்சனூர், ராயண்டபுரம், ஜம்போடை, சின்னியம்பேட்டை, புதூர்செக்கடி, மலையனூர் செக்கடி, டி.வேலூர் ஆகிய பகுதிகளில் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.

கடந்த 12–ந் தேதி ‘வார்தா’ புயல் காரணமாக தண்டராம்பட்டு பகுதியில் வாழைகள் அடியோடு சாய்ந்து சேதமானது. இதில் பல வாழைகள் குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது. வாழைகள் அனைத்தும் சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் பலத்த நஷ்டத்திற்கு உள்ளாகினார்கள்.

புயலால் சேதமடைந்த பயிர்களை அரசு ஆய்வு செய்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

உதவி கலெக்டர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று தண்டராம்பட்டு பகுதிகளில் புயலால் சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகாரிகளிடம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டறிந்தார். பின்னர் தாசில்தார் சஜேஸ்பாபுவிடம் தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்து புள்ளி விவரங்களை விரைவில் அளிக்கும்படி கூறினார்.

ஆய்வின்போது தண்டராம்பட்டு வட்டவழங்கல் அலுவலர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர் சண்முகம், வேளாண்மை அலுவலர் பிரபு, தோட்டக்கலைத்துறை பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story