அரசு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


அரசு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-15T18:12:48+05:30)

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இட நெருக்கடி சிவகங்கையில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் காலை, மதியம் என 2 சுழற்சிகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கால

சிவகங்கை,

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இட நெருக்கடி

சிவகங்கையில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் காலை, மதியம் என 2 சுழற்சிகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் காலை சுழற்சியில் 1,780 மாணவிகள் படித்து வருகின்றனர். மதிய சுழற்சியில் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இக்கல்லூரியில் போதிய இடவசதி இல்லாமல் இருந்து வருகிறது. காலை சுழற்சியில் அதிக மாணவிகள் படித்து வருவதால், காலையில் வகுப்பறைகள் நிறைந்து காணப்படும். இதனால் மாணவிகள் இருக்கைக்கு கூட இடமின்றி பயின்று வருகின்றனர். மதிய சுழற்சியில் குறைவான மாணவிகள் உள்ளதால் வகுப்பறைகள் வெறிச்சோடி கிடக்கும்.

காலை சுழற்சியில் உள்ள இட நெருக்கடி காரணமாக கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், காலை சுழற்சியில் பி.பி.ஏ., பி.காம் படிக்கும் மாணவிகளை, மதிய சுழற்சியில் வந்து படிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு மாணவிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கூறும்போது, நாங்கள் வெளியூரில் இருந்து வெகு தூரம் கடந்து படிக்க வருகிறோம். மதிய சுழற்சியில் படிக்க வந்தால் கல்லூரி முடிந்து ஊருக்கு செல்ல இரவு நேரம் ஆகிவிடும். எனவே எங்களுக்கு தொடர்ந்து காலை சுழற்சியில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டம்

இந்தநிலையில் காலை சுழற்சியில் பயிலும் மாணவிகளுக்கு, மதிய சுழற்சியில் வகுப்புகள் நடத்த கூடாது என்று வலியுறுத்தி நேற்று அரசு கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலின்பேரில் அங்கு வந்த சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன், தாசில்தார் நாகநாதன் ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story