மண்டபம் வேதாளை அருகே உயிருடன் 70 கிலோ அரியவகை கடல் அட்டைகள்; வனத்துறையினர் கைப்பற்றினர்


மண்டபம் வேதாளை அருகே உயிருடன் 70 கிலோ அரியவகை கடல் அட்டைகள்; வனத்துறையினர் கைப்பற்றினர்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 12:49 PM GMT)

மண்டபம் வேதாளை அருகே உயிருடன் 70 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவை கடலில் விடப்பட்டன. ரோந்து மண்டபம் வேதாளை அருகே சிங்கிவலசை குச்சி கடற்கரை பகுதியில் நேற்று வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனக்காப்பாளர்கள் காளிதாஸ், ராதா, முனியசாமி ம

பனைக்குளம்,

மண்டபம் வேதாளை அருகே உயிருடன் 70 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவை கடலில் விடப்பட்டன.

ரோந்து

மண்டபம் வேதாளை அருகே சிங்கிவலசை குச்சி கடற்கரை பகுதியில் நேற்று வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனக்காப்பாளர்கள் காளிதாஸ், ராதா, முனியசாமி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் ஒரு சிறிய படகில் இருந்து ஏராளமான பைகளை சிலர் இறக்கி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது அங்கு வனத்துறையினர் வருவதை கண்டதும் அவர்கள் பைகளை கடல் நீரில் மூழ்கடித்து வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் கடல்நீரில் மூழ்கி கிடந்த 10 பைகளை எடுத்து சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கடல் அட்டைகள் 70 கிலோ இருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த கடல் அட்டைகள் அனைத்தும் உயிருடன் இருப்பதும் தெரிந்தது. அதைதொடர்ந்து கடல் அட்டைகளை மீண்டும் கடலுக்குள் விடுவதற்காக கடல் அட்டைகளை 3 பிளாஸ்டிக் கேனில் போட்டு வாகனம் மூலமாக பாம்பன் ரோடு பாலத்திற்கு வனத்துறை கொண்டு வந்தனர். அதன்பின்னர் ரோடு பாலத்தில் நின்றபடி உயிருடன் இருந்த 70 கிலோ கடல் அட்டை களையும் கடலில் விட்டனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடல் அட்டைகளை பிடித்து வந்து கடலில் போட்டுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடிவருகின்றனர். வனத்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடல்அட்டைகள் பதப்படுத்தப்பட்டு அதன்பின் வெளிநாடுகளுக்கு கடத்த பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகின்றது. உயிருடன் இருந்த அரிய வகை கடல் அட்டைகளை வனத்துறையினர் பாம்பன் ரோடு பாலத்தில் நின்று கடலில் விட்டபோது அதை பார்த்த ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்போன்களில் படம் பிடித்தனர்.


Next Story