ஈரோடு–சென்னை எழும்பூர் இடையே பகல் நேர சிறப்பு ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு


ஈரோடு–சென்னை எழும்பூர் இடையே பகல் நேர சிறப்பு ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T18:40:32+05:30)

ஈரோடு–சென்னை எழும்பூர் இடையே பகல்நேர சிறப்பு ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில் சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள், வர்த

சூரமங்கலம்,

ஈரோடு–சென்னை எழும்பூர் இடையே பகல்நேர சிறப்பு ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

சிறப்பு ரெயில்

சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்பட பலர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஈரோட்டில் இருந்து சேலம், விருத்தாசலம் வழியாக சென்னை எழும்பூருக்கு பகல் நேர சிறப்பு ரெயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு ரெயில் இயக்கத்தை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து சமீபத்தில் சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்தது. இந்தநிலையில் ஈரோடு–சென்னை எழும்பூர் இடையே பகல்நேர சிறப்பு ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

2 நாட்கள் மட்டும் இயக்கம்

வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டு வந்த ஈரோடு–சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும். அதாவது, இந்த மாதத்தில் நாளை மற்றும் 18, 24, 25 மற்றும் 31–ந் தேதிகளில் மட்டுமே இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story