நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சி மாவட்ட நீதிபதி ராஜசேகர் திறந்து வைத்தார்

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சி மாவட்ட நீதிபதி ராஜசேகர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 Dec 2016 9:30 PM GMT (Updated: 15 Dec 2016 2:04 PM GMT)

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட நீதிபதி ராஜசேகர் திறந்து வைத்தார்.

நெல்லை,

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட நீதிபதி ராஜசேகர் திறந்து வைத்தார்.

கண்காட்சி

பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தங்கி இருந்து படித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கிறார்கள். இந்த பொருட்களின் விற்பனை கண்காட்சி நெல்லை கோர்ட்டு வளாகத்தில் சட்ட உதவி மையம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி தமிழரசி, மக்கள் கோர்ட்டு நீதிபதி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருட்கள்

இந்த நிகழ்ச்சியில் நெல்லை வக்கீல் சங்க செயலாளர் ராஜேசுவரன், துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆசிரியர்கள் அருண்குமார், சுகந்தி, ஜெபகுமாரி, இந்திரா மற்றும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் கேக், இனிப்பு, பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், மெழுகுவர்த்தி, இட்லி பொடி, மேஜை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி வருகிற 21–ந் தேதி வரை நடைபெறுகிறது.

Next Story