கிராமத்தில் வாழ பிடிக்காததால் கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு இளம் பெண் தற்கொலை


கிராமத்தில் வாழ பிடிக்காததால் கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு இளம் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 15 Dec 2016 2:22 PM GMT)

கிராமத்தில் வாழ பிடிக்காததால் மனமுடைந்த இளம் பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கிராம வாழ்க்கை பிடிக்கவில்லை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காளிக்கவுண்டன் புதூ

திருப்பூர்,

கிராமத்தில் வாழ பிடிக்காததால் மனமுடைந்த இளம் பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கிராம வாழ்க்கை பிடிக்கவில்லை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காளிக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 30), விவசாயி. இவருக்கும் திருப்பூர் மாஸ்கோ நகர் 3–வது வீதியை சேர்ந்த கருப்பசாமியின் மகள் லதா (24) வுக்கும் கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அதன் பின்னர் அவர்கள் தாராபுரம் காளிக்கவுண்டன் புதூரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு முன்பு திருப்பூரில் நகர வாழ்க்கை வாழ்ந்த லதாவுக்கு, கிராம சூழலில் வாழ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், அடிக்கடி திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு லதா தனது குழந்தையுடன் திருப்பூருக்கு வந்திருந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த லதா, வாழ்க்கையில் வெறுப்படைந்து சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்துள்ளார். அத்துடன் தனது கணவருக்கு போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவது குறித்து கூறியுள்ளார். இதனால், பதறிய தங்கராஜ், இதுபற்றி தனது மாமியார் பாக்கியத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே அவர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த போது, வீட்டில் லதா மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், லதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து லதாவின் தாயார் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால், திருப்பூர் வடக்கு உதவி போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) குணசேகரனும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story