தொலைபேசி கம்பத்தில் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பலி


தொலைபேசி கம்பத்தில் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 15 Dec 2016 11:15 PM GMT (Updated: 2016-12-15T19:55:06+05:30)

திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– ஆயுதப்படை போலீஸ்காரர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்

திருப்பூர்,

திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஆயுதப்படை போலீஸ்காரர்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜின் மகன் ஈஸ்வரன்(வயது 32). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(27). இவர்களின் மகள் தேவதர்ஷினி(1).

ஈஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று இருந்தார். அங்கு பாதுகாப்பு பணி முடிந்து திருப்பூர் வந்த அவர், நேற்று முன்தினம் ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு தனது சொந்த ஊரான தேனிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று வேலைக்கு வருவதற்காக, தனது வீட்டில் இருந்து அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் திருப்பூருக்கு புறப்பட்டார்.

தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்து

காலை 6.45 மணி அளவில் திருப்பூர்–தாராபுரம் ரோடு ஒத்தக்கடை பகுதியில் அவர் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திக்கொண்டு வந்ததாக தெரிகிறது. அந்த வாகனம் தன் மீது மோதாமல் இருக்க ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் இறக்கினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கியதுடன் அங்கிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். அத்துடன் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்தது.

பரிதாப சாவு

இதனால் கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவருடைய உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story