7 சதவீத அகவிலைப்படி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு 28–ந்தேதி அரசு ஊழியர்கள் போராட்டம் மாநில துணைத்தலைவர் பேட்டி


7 சதவீத அகவிலைப்படி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு 28–ந்தேதி அரசு ஊழியர்கள் போராட்டம் மாநில துணைத்தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T21:05:21+05:30)

7 சதவீத அகவிலைப்படி வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் வருகிற 28–ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மாநில துணைத் தலைவர் கூறினார். 28–ந்தேதி போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலை

திண்டுக்கல்,

7 சதவீத அகவிலைப்படி வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் வருகிற 28–ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மாநில துணைத் தலைவர் கூறினார்.

28–ந்தேதி போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:–

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த 1.7.2016 முதல் 7 சதவீத அகவிலைப்படி வழங்கி இருக்க வேண்டும். அதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை மாதந்தோறும் கிடைத்து இருக்கும். ஆனால், 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

விரைவில் அடுத்த அகவிலைப்படி காலம் வந்துவிடும். எனவே, அந்த 7 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 28–ந்தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

ரொக்கமாக சம்பளம்

அதேபோல் தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு, ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி கடந்த 1.1.2016 முதல் ஊதிய மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஓராண்டு நிறைவுபெற இருக்கும் நிலையில் இதுவரை ஊதிய மாற்றம் நிகழவில்லை. இதுவும் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. எனவே, உடனடியாக 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அதை தவிர்க்க, மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதுதொடர்பாக திருவண்ணாமலையில் வருகிற 6, 7, 8–ந்தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி கூறினர்.


Next Story