கம்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி


கம்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 6:32 PM GMT)

கம்பம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா பயிற்சி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்ற

கம்பம்,

கம்பம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

யோகா பயிற்சி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு சித்தா டாக்டர் சிராஜூதீன் தலைமையில், யோகா பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பல்வேறு வகையான ஆசனப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பத்மாசனம், வஜ்ராசனம், உஸ்ட்ராசனம், அர்த்த உஸ்ட்ராசனம் ஆகிய உட்கார்ந்த நிலையில் செய்யக் கூடிய ஆசனங்களும், படுத்த நிலையில் செய்யக்கூடிய சவ ஆசனம், பிராணயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் ரத்தத்தில், ஆக்சிஜனின் செரிவை கூட்டுவதும் இந்த பயிற்சிகளின் நோக்கமாகும்.

80 பெண்கள்

இந்த சிறப்பு யோகா பயிற்சியில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி கிராமங்களை சேர்ந்த 80–க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் முருகானந்தன், டாக்டர் சசிதீபா ஆகியோர் யோகாவின் நன்மைகள் குறித்து பேசினர்.


Next Story