ஓமலூர் அருகே ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை


ஓமலூர் அருகே ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 15 Dec 2016 9:15 PM GMT (Updated: 15 Dec 2016 7:15 PM GMT)

ஓமலூர் அருகே ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், சேலம் கோர்ட்டில் தலைம

ஓமலூர்,

ஓமலூர் அருகே ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர்

ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், சேலம் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். மகள் ஜெயலட்சுமி திருமணமாகி சேலம் பெரமனூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சீனிவாசன், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விஜயா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிவிக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக சுப்பிரமணி தனது மனைவி விஜயாவுடன் சேலத்தில் உள்ள மகள் ஜெயலட்சுமி வீட்டிற்கு நேற்று முன்தினம் பகலில் வந்து விட்டனர். மேலும் பெங்களூருவில் உள்ள மகன் சீனிவாசனையும் ஊருக்கு அழைத்திருந்தனர்.

பூட்டை உடைத்து கொள்ளை

அதன்படி, சீனிவாசன் நேற்று இரவு 8.30 மணிக்கு பண்ணப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அதாவது, சுப்பிரமணி–விஜயா தம்பதி வீட்டை பூட்டி விட்டு சேலம் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார், கொள்ளை நடந்த வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story