தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின


தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 15 Dec 2016 9:27 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலைநிறுத்தம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 65 ஆயிரம் செல்போன் டவர்களை பிரித்து தனியார் மயமாக்கும் முயற்சியை

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலைநிறுத்தம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 65 ஆயிரம் செல்போன் டவர்களை பிரித்து தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கக்கூடாது என வலியுறுத்தியும் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகம், செல்போன் பில் கட்டும் அலுவலகம், துணை அலுவலகங்கள் என அனைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் வேலைபார்க்கும் 350–க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடிக்கையாளர்கள் அவதி

இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. செல்போன் ரீசார்ஜ் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் போன் கட்டணத்திற்கான பில் தொகையை அலுவலகங்களில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் புகார்களும் பெறப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டதாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்சங்க மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்தார்.


Next Story