கன்னியாகுமரி ரோட்டு ஓரத்தில் வசிக்கும் டெல்லியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை


கன்னியாகுமரி ரோட்டு ஓரத்தில் வசிக்கும் டெல்லியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 9:46 PM GMT)

கன்னியாகுமரி ரோட்டு ஓரத்தில் வசிக்கும் டெல்லியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி,

டெல்லி பவானா மாவட்டம் ஜே.கே.காலனியை சேர்ந்த 168 குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களாக கன்னியாகுமரி 4 வழிச்சாலை முடியும் பகுதியில் ரோட்டு ஓரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். இதில் 75 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் முரசு,பாத்திரம் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள். கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு இவர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களிடம், நேற்று ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், மாவட்ட குழந்தைகள் உதவி மைய குழு உறுப்பினர் ஜெமி ஆகியோர் திடீர் என்று சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர் விவரம், ஆதார் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், அவர்களிடம் குழந்தைகளை பிச்சை எடுக்க விடக்கூடாது என்றும், குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

Next Story