அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 25 பேர் கைது


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 25 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T03:19:41+05:30)

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 25 பேர் கைது

திருச்சி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

திடீர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த ராஜராஜசோழன், க.பி.பாலசுப்பிரமணியன், திருச்செல்வம், வேதாத்ரிநகர் பாலு, மணிகண்டன், ரமேஷ், கார்த்தி உள்பட 25 பேர் நேற்று காலை திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே திரண்டனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கட்சி கொடியுடன் எம்.ஜி.ஆர். சிலை முன்பு தரையில் அமர்ந்து திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியபடி அவர்கள் அமர்ந்து இருந்தனர். கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் அந்த வழியாக வாகனங்களில் சென்ற பலர் இதனை பார்த்தபடியே சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், உண்ணாவிரதம் இருந்த அ.தி.மு.க.வினரிடம், “அனுமதியின்றி இப்படி திடீரென்று உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. ஆகவே கலைந்து செல்லுங்கள்” என்று கூறினார்.

25 பேர் கைது

ஆனால் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து தொடர்ந்து அமர்ந்து இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.அப்போது அவர்கள் சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத் தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கைதான 25 பேரையும் திருச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story