வங்கி மேலாளர்- காசாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


வங்கி மேலாளர்- காசாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:19:40+05:30)

வங்கி மேலாளர்- காசாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த மரவனூரில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் கூலியை முறைகேடாக பிடித்தம் செய்து வருவதாக கூறியும், அதை கேட்க சென்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் காசாளரை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மரவனூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித், ம.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். மேலும் வங்கியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களின் கூலியை எந்தவித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்வது குறித்தும், முறைகேடுகள் குறித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

Next Story