நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ‘ஏ.சி.மெக்கானிக்’ சாவு


நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ‘ஏ.சி.மெக்கானிக்’ சாவு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-16T03:23:11+05:30)

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ‘ஏ.சி.மெக்கானிக்’ சாவு

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், ‘ஏ.சி.மெக்கானிக்’பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

‘ஏ.சி.மெக்கானிக்’

இரணியல் அருகே உள்ள நெல்லியார்கோணத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 17), ஏ.சி. மெக்கானிக். இவர் ஒரு பழைய மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவதற்காக, தனது நண்பர் விஜியுடன் (22) நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

நாகர்கோவிலில் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிவிட்டு, 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு புறப்பட்டனர். 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இவர்கள் டெரிக் சந்திப்பில் இருந்து ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை நோக்கி சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார், சங்கர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சங்கர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை, நண்பர் விஜி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன், காரை ஓட்டி வந்த பூதப்பாண்டி வடக்கு ரதவீதியை சேர்ந்த சானோன் வெஸ்லி (20) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவர் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

Next Story