தஞ்சையில் நாளை நடக்கிறது காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் விவசாயிகள் திரளாக பங்கேற்க, பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் அழைப்பு

தஞ்சையில் நாளை காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு கருத்தரங்கம் இதுகுறித்து பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க தஞ்
பாதுகாப்பு கருத்தரங்கம்
இதுகுறித்து பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க தஞ்சை கிளை தலைவர் பரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வழிவகை காணுதல், காவிரி பாசன பகுதிகளை மேம்படுத்தி செயல்திட்டங்கள் வகுத்தல், இவற்றிற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, சமுதாய ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் ஆலோசனைகருத்தரங்கில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த கருத்தரங்கத்தை பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம், தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு இணைந்து காவிரி பாசன விவசாய சங்கங்களின் ஆதரவோடு நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள், காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எனவே இந்த கருத்தரங்கில் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கீழ்காவிரி வடிநில வட்ட திருச்சி மண்டல முன்னாள் தலைமைப்பொறியாளர் அசோகன் உடன் இருந்தார்.