வாகனசோதனையின் போது காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேர் கைது


வாகனசோதனையின் போது காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2016 10:29 PM GMT (Updated: 15 Dec 2016 10:29 PM GMT)

வடுவூர் அருகே வாகனசோதனையின் போது காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். வாகனசோதனை வலங்கைமான் அருகே உள்ள கீழஅமரவாதி வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது25). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (30). இ

வடுவூர் அருகே வாகனசோதனையின் போது காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகனசோதனை

வலங்கைமான் அருகே உள்ள கீழஅமரவாதி வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது25). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (30). இவர்கள் 2 பேரும் சவுதிஅரேபியாவில் வேலைபார்த்து வந்தனர். இந்தநிலையில் ராஜதுரை நான் ஊருக்கு போவதாக குருமூர்த்தியிடம் கூறினார். அப்போது குருமூர்த்தி, ராஜதுரையிடம் ரூ.1 லட்சம் கொடுத்து வீட்டில் கொடுத்துவிடு என்றார். மேலும் குருமூர்த்தி அவரது தந்தை ரத்தினத்திடம் தொலை பேசியில் எனது நண்பன் ஊருக்கு வருகிறான் ஆலங்குடிக்கு சென்று பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து ரத்தினம், ராஜதுரை வீட்டிற்கு சென்று தனது மகன் கொடுத்து அனுப்பிய பணத்தை கேட்டுள்ளார். அதற்கு ராஜதுரை பணத்தை கொடுக்காமல் ரத்தினத்தை தாக்கினார். இந்த சம்பவத்தை வெளிநாட்டில் உள்ள தனது மகனிடம் ரத்தினம் கூறியுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருந்து வந்த குருமூர்த்தி நேற்று தனது உறவினர்களுடன் ஒரு காரில் ஆலங்குடிக்கு வடுவூர் வாண்டையான் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

10 பேர் கைது

அப்போது அந்த வழியாக வந்த அந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரில் வந்த 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கும்பகோணம் கீழஅமராவதி வடக்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி(25), ரத்தினம்(50), கும்பகோணம் அருகே உள்ள வாமாங்குடியை சேர்ந்த சோமசுந்தரம்(25), கிருபானந்தம்(29), பிரகாசம்(30), சிலம்பரசன்(32), விக்னேஷ் (20), செல்வம்(27), புவியரசன்(24), மற்றொரு சிலம்பரசன்(22) ஆகிய 10 பேர் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் நாங்கள் தற்காப்புக்காக காரில் ஆயுதங்களை கொண்டு செல்வதாக கூறினர். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story