திருவாரூரில் இன்று காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நல்லக்கண்ணு, பாண்டியன், முத்தரசன் பங்கேற்கின்றனர்


திருவாரூரில் இன்று காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நல்லக்கண்ணு, பாண்டியன், முத்தரசன் பங்கேற்கின்றனர்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:35 PM GMT (Updated: 15 Dec 2016 10:35 PM GMT)

திருவாருரில் இன்று(வெள்ளிக்கிழமை) காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் நல்லக்கண்ணு, பாண்டியன், முத்தரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பேட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவ

திருவாருரில் இன்று(வெள்ளிக்கிழமை) காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் நல்லக்கண்ணு, பாண்டியன், முத்தரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பேட்டி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த செப்டம்பர் மாதம் 20–ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்த தண்ணீர் மற்றும் மழையை நம்பி காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா விதைப்பு மற்றும் தெளிப்பு நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவ மழையும் பெய்யாமல் போனதால் சாகுபடி செய்துள்ள விதைகள் பல இடங்களில் முளைக்காமலும், முளைத்த பயிர் கருகியும் போனது. 2–வது தடவை தெளித்தும் பயன் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் 27 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு

எனவே காவிரி டெல்டா மாவட்டகளை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூர், தஞ்சை, நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்கள் பங்கேற்கும் காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு திருவாரூர் கீழவிதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story