ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் திலீப்குமார் டிஸ்சார்ஜ் ஆனார்


ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் திலீப்குமார் டிஸ்சார்ஜ் ஆனார்
x

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6–ந் தேதி மும்பை பாந்திரா லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் வீக்கம் ஏற்பட்டதால், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல

மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6–ந் தேதி மும்பை பாந்திரா லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் வீக்கம் ஏற்பட்டதால், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து 94 வயது திலீப்குமார் டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது, அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அவருடைய மனைவி சாய்ரா பானு நிருபர்களிடம் கூறினார்.

திலீப்குமார் ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கடந்த 11–ந்தேதி தன்னுடைய 94–வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story