மான்கூர்டில் கோர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண்கள் உள்பட 3 பேர் பலி 3 வீடுகள் தரைமட்டம்


மான்கூர்டில் கோர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண்கள் உள்பட 3 பேர் பலி 3 வீடுகள் தரைமட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:58 PM GMT (Updated: 15 Dec 2016 11:57 PM GMT)

மான்கூர்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 7 சிறுவர், சிறுமிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் தரைமட்டமாகின. சிலிண்டர் வெடித்தது மும்பை மான்கூர்டு, மகாராஷ்டிரா நகரில் ரஹிவாசி சங்க் குடிசைப்பகுதி உள்ளது. நேற்ற

மும்பை,

மான்கூர்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 7 சிறுவர், சிறுமிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் தரைமட்டமாகின.

சிலிண்டர் வெடித்தது

மும்பை மான்கூர்டு, மகாராஷ்டிரா நகரில் ரஹிவாசி சங்க் குடிசைப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 6 மணியளவில் இங்குள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அங்குள்ள மேல்தளத்துடன் கூடிய 3 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இந்த பயங்கர விபத்தில் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். சிலிண்டர் வெடித்ததில் அவர்கள் தீக்காயமும் அடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பு

இந்தநிலையில் சத்தம்கேட்டு திடுக்கிட்டு எழுந்த பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்னவோ, ஏதோ என பதறி அடித்து கொண்டு ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீடுகள் இடிந்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சதாப்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் சம்பவம் இடத்திற்கு வந்து மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

3 பேர் சாவு

இருப்பினும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் கஸ்தூர்பா காந்தி(வயது62), ரேக்கா வான்கடே, வாலிபர் சஞ்சய் வான்கடே ஆகிய 3 பேர் வழியிலேயே இறந்துபோனார்கள். மேலும் 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இவர்களில் 7 பேர் சிறுவர், சிறுமிகள் ஆவார்.

சம்பவம் குறித்து மான்கூர்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story