கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் துப்புரவு பணி கலெக்டர் ஆய்வு


கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் துப்புரவு பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T18:30:46+05:30)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் ஏராளமான குப்பைகள் சேர்ந்தன. இந்த குப்பைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். இதனையடுத்து துப்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் ஏராளமான குப்பைகள் சேர்ந்தன.

இந்த குப்பைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பணிதள பொறுப்பாளர்கள் உள்பட பலர் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திடீரென ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியை மேற்கொண்டவர்களை கலெக்டர் பாராட்டினார். மேலும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமிநரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story