தானிப்பாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது


தானிப்பாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 1:01 PM GMT)

தானிப்பாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கோவில் பூட்டு உடைப்பு தானிப்பாடி அருகே

தண்டராம்பட்டு,

தானிப்பாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கோவில் பூட்டு உடைப்பு

தானிப்பாடி அருகே போந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலை திறக்க, கோவில் நிர்வாகி குமார் என்பவர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த குமார் கூச்சலிட்டார். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்குள் ஓடி வந்து மர்ம நபர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும், அவர்களுடைய மோட்டார் சைக்கிளையும் தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 வாலிபர்கள் கைது

இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் தானிப்பாடியை சேர்ந்த 18 மற்றும் 16 வயதுடைய வாலிபர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story