மானாமதுரையில் தமிழக கபடி அணியில் பங்குபெறும் மாணவிகளுக்கு பயிற்சி


மானாமதுரையில் தமிழக கபடி அணியில் பங்குபெறும் மாணவிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 16 Dec 2016 1:04 PM GMT)

தமிழக கபடி அணியில் பங்குபெறும் மாணவிகளுக்கு மானாமதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி தமிழகத்தில் கபடி போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு கலந்ததாகும். கபடி என்ற உடனேயே புழுதி பறக்கும் களத்தில் ரத்தம் சொட்ட விளையாடிய நினைவுகள் மனக்கண்

மானாமதுரை,

தமிழக கபடி அணியில் பங்குபெறும் மாணவிகளுக்கு மானாமதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி

தமிழகத்தில் கபடி போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு கலந்ததாகும். கபடி என்ற உடனேயே புழுதி பறக்கும் களத்தில் ரத்தம் சொட்ட விளையாடிய நினைவுகள் மனக்கண்ணில் நின்றாடும். கோடை காலங்களில் இதுதான் மாணவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டாவில் தேசிய அளவில் கபடி போட்டி வருகிற 24–ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கு மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை உடற்பயிற்சி ஆசிரியர் கலியாணசுந்தரம் காலை, மாலை இரு வேளைகளிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

கடந்த 10 நாட்களாக நடந்துவரும் இந்த பயிற்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை மற்றும் மாலை என 2 வேளைகளிலும் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆர்வம்

பயிற்சியில் ஆட்ட நுணுக்கங்கள், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு விளையாடுதல், யேகா பயிற்சி உள்ளிட்டவைகள் கற்றுத்தரப்படுகின்றன. கபடி போட்டி மீதான ஆர்வம் குறைந்துவரும் வேளையில் பின்தங்கிய மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளிப்பதால் இதனை பார்த்து மற்ற மாணவிகள் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு கபடி போட்டியில் எப்படி விளையாட வேண்டும், எதிராளியை சிக்க வைக்க என்ன தந்திரங்களை மேற்கொள்ள வேண்டும் போன்ற அம்சங்கள் கற்று தரப்படுவதாகவும், 12 பேர் தேர்வு செய்யப்பட்டாலும் களத்தில் விளையாடுவது ஏழு பேர்தான், இந்த பயிற்சியில் சிறப்பாக விளையாடும் மாணவிகள் 7 பேர் தமிழக கபடி அணியில் இடம் பெறுவார்கள் என பயிற்சியாளர் தெரிவித்தார்.


Next Story