சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அதிகாரியிடம், கிராம மக்கள் மனு


சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அதிகாரியிடம், கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:00 PM GMT (Updated: 16 Dec 2016 1:22 PM GMT)

திருச்சுழி அருகே உள்ள கீழக்கண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டம் கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கிராம மக்கள் புகார் கூறி உள்ளன

திருச்சுழி,

திருச்சுழி அருகே உள்ள கீழக்கண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டம் கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கிராம மக்கள் புகார் கூறி உள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைதொடர்ந்து கிராம மக்கள் திருச்சுழி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி முத்துராமலிங்கத்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரில், கொட்டம் கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருக்குழாய்களுக்கு சீரான முறையில் தண்ணீர் வருவதில்லை. கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி, தினமும் குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைதொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story