ராயக்கோட்டை அருகே லாரி–மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் சாவு


ராயக்கோட்டை அருகே லாரி–மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T19:05:50+05:30)

ராயக்கோட்டை அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். வாலிபர்கள் சாவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சீங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 22). ஆத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (19). இருவரும

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

வாலிபர்கள் சாவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சீங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 22). ஆத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (19). இருவரும் பொக்லைன் எந்திரம் டிரைவர்கள். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

வழியில் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டி பஸ்நிறுத்தம் பக்கமாக வந்தபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இதில் முரளி, கார்த்திக் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story