சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-16T19:59:15+05:30)

சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையில் அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் பிணம் மீட்பு சேலம் கொண்டலாம்பட்டி அடுத்துள்ள நெய்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமா

சேலம்,

சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையில் அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பிணம் மீட்பு

சேலம் கொண்டலாம்பட்டி அடுத்துள்ள நெய்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். விவசாயியான இவர், நேற்று மாடுகளுக்கு புல் அறுக்க வீட்டின் அருகே சென்றார். அப்போது, அங்குள்ள திருமணிமுத்தாறு சாக்கடைக்குள் ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார், இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் சாக்கடையில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவருக்கு வயது 29 இருக்கும். உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பிணமாக கிடந்தவர், இறந்து 4 நாட்கள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். நெய்காரப்பட்டி பகுதியில் லாரிகள் அதிகளவில் வந்து நிற்கும். எனவே, யாராவது அவரை கொலை செய்து ஓடையில் உடலை வீசி சென்றார்களா? அல்லது அவரே திருமணிமுத்தாறு ஓடையில் தவறி விழுந்து இறந்திருக்கலாமா? என்பது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையில் வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story