திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்


திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
x
தினத்தந்தி 16 Dec 2016 7:45 PM GMT (Updated: 2016-12-16T21:33:11+05:30)

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொத

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

தி.மு.க. மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அழகியநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story