திருவையாறில் தியாகராஜர் 170–வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது


திருவையாறில்  தியாகராஜர் 170–வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 16 Dec 2016 4:37 PM GMT)

திருவையாறு,டிச.17– திருவையாறு தியாகராஜரின் 170–வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. ஆராதனை விழா கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர். அவர் மறைந்த புஷ்யபகுல பஞ்சமிதிதி அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம்

திருவையாறு,

திருவையாறு தியாகராஜரின் 170–வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

ஆராதனை விழா

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர். அவர் மறைந்த புஷ்யபகுல பஞ்சமிதிதி அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 170–வது ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 13–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜருக்கு ஆராதனை 17–ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் வந்து தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அன்று அதிகாலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனையும், தியாகராஜர் சிலை ஊர்வலமும் நடைபெறுகிறது.

பந்தக்கால் முகூர்த்தம்

விழாவை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் சமாதி அருகே நேற்று காலை 10 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தியாக பிரம்ம மகோத்சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் பந்தக்காலை நட்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தியாகராஜரின் 170–வது ஆராதனை விழா ஜனவரி 13–ந்தேதி தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெறுகிறது. 13–ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவிற்கு அறங்காவலர் குழு தலைவர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவை இசைக்கலைஞர் சுதாரகுநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் விழாவின் 5 நாட்களிலும் பங்கு கொண்டு தியாகராஜர் கீர்த்தனைகளைப்பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழா ஏற்பாடுகள்

இதற்கான ஏற்பாடுகளை ஜி.ஆர்.மூப்பனார் ஆலோசனைப்படி அறங்காவலர்கள் சுரேஷ்மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, சீனிவாசன், மற்றும் ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், சிட்டியூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகக்குழு கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story