திருவையாறு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


திருவையாறு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2016 5:50 PM GMT (Updated: 2016-12-16T23:20:09+05:30)

திருவையாறு அடுத்த குழிமாத்தூர் குடியானத்தெருவை சேர்ந்த ஆசைதம்பி இவருடைய மனைவி ராதாலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் (வயது 24), சதீஷ்கண்ணன் ஆகிய 2 மகன்களும், கண்மணி, சிந்து ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 13 ஏக்கரில் விவசாயம் செய்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் வய

திருவையாறு,

திருவையாறு அடுத்த குழிமாத்தூர் குடியானத்தெருவை சேர்ந்த ஆசைதம்பி இவருடைய மனைவி ராதாலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் (வயது 24), சதீஷ்கண்ணன் ஆகிய 2 மகன்களும், கண்மணி, சிந்து ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 13 ஏக்கரில் விவசாயம் செய்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் வயலில் நெற்பயிர்கள் காய்ந்தன. எனவே 90 அடிக்கு மேல் ஆள்துளை கிணறு அமைத்தனர். ஆனால் தண்ணீர் இல்லை. இதனால் அரவிந்த் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அரவிந்த் விஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story