போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கு உதவுங்கள் வரவேற்பாளர் பணியில் ஈடுபடுவோருக்கு அறிவுரை


போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கு உதவுங்கள் வரவேற்பாளர் பணியில் ஈடுபடுவோருக்கு அறிவுரை
x
தினத்தந்தி 16 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-17T00:29:42+05:30)

போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கு வரவேற்பாளர் பணியில் ஈடுபடும் போலீசார் உதவ வேண்டும் என்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது. வரவேற்பு போலீசார் தமிழ்நாடு முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்கள், போ

திண்டுக்கல்

போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கு வரவேற்பாளர் பணியில் ஈடுபடும் போலீசார் உதவ வேண்டும் என்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

வரவேற்பு போலீசார்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்கள், போலீஸ் தனிப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுக்க வரும் மக்களுக்கு உதவும் வகையில் வரவேற்பாளர்களாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலும் பெண் போலீசாரே அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் வரவேற்பாளராக இருக்கும் போலீசாருக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கும்படி தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், தனிப்பிரிவு அலுவலகங்களில் வரவேற்பாளராக பணியாற்றும் போலீசாருக்கான முதல்கட்ட பயிற்சி முகாம், சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் போலீஸ் நிலையங்கள், போலீஸ் தனிப்பிரிவு அலுவலகங்களை சேர்ந்த வரவேற்பு போலீசார் கலந்து கொண்டனர்.

டி.ஐ.ஜி. கார்த்திகேயன்

இந்த பயிற்சி முகாமை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு அருணாசலம், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், முத்துலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். அப்போது போலீஸ் நிலையங்களுக்கோ, போலீஸ் தனிப்பிரிவு அலுவலகங்களுக்கோ புகார் கொடுக்க வரும் மக்களுக்கு, தானாக முன்வந்து உதவ வேண்டும்.

மேலும், புகார்களை கொடுக்க வருபவர்களை தேவையில்லாமல் அலைக்கழிக்கக் கூடாது. அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் அளிக்க வருபவர்களிடம் அதிகாரிகள் வரும் நேரத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல் புகார் கொடுக்க வந்தவர்கள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் பிரச்சினைகளை பொறுமையாக கேட்டறிந்து தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாம் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.


Next Story