கிணத்துக்கடவு அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி கவிழ்ந்தது 3 பேர் படுகாயம்


கிணத்துக்கடவு அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி கவிழ்ந்தது 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-17T00:47:56+05:30)

கிணத்துக்கடவு அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி கவிழ்ந்தது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கிணத்துக்கடவு வழியாக நேற்று காலை லாரி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்தது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கிணத்துக்கடவு வழியாக நேற்று காலை லாரி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முசிறியை சேர்ந்த சின்னதம்பி (வயது 46) என்பவர் ஓட்டினார். லாரியில் ஏற்காட்டை சேர்ந்த சுப்பிரமணி, முசிறியை சேர்ந்த கோவிந்த், உமேஷ், ராஜ்குமார் (22), சுரேன் (22), ரோகிராம் (22) ஆகியோர் இருந்தனர்.

லாரி கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் வந்து கொண்டிருந்த போது லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

3 பேர் படுகாயம்

இந்த விபத்தில் லாரியில் இருந்த ராஜ்குமார், சுரேன், ரோகிராம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் திருமேனி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி கவிழ்ந்ததால் கிணத்துக்கடவு–கொண்டம்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story