கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 7:49 PM GMT)

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் சர்க்கரை ஆலைமுன்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட த

மங்களமேடு

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் சர்க்கரை ஆலைமுன்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காமராஜ், கோவிந்தன், கருப்புடையார், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ரூ.4 ஆயிரம்

ஆர்ப்பாட்டத்தில் நடப்பு அரவை பருவத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆதாரவிலை வழங்காத எறையூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எறையூர், வி.களத்துார், லப்பைக்குடிக்காடு, புதுவேட்டக்குடி, அகரம்சீகூர், வேப்பூர் பகுதி களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 

Next Story