மணல் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி வாங்கல் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு

மணல் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி வாங்கல் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர். மனு வாங்கல் பகுதி மக்கள் சிலர் ஒன்றாக இணைந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– வாங்கலில் 1,00
கரூர்,
மணல் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி வாங்கல் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
மனுவாங்கல் பகுதி மக்கள் சிலர் ஒன்றாக இணைந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
வாங்கலில் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திட்டுகள் உள்ளது. இந்த மணல் திட்டுக்களை அகற்ற அரசு மணல் குவாரி அமைய உள்ளது. இதனால் வாங்கல் ஊராட்சிக்கு அதிக நிதி கிடைக்கும். இந்த நிதி மூலம் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதியாக இருக்கும். மேலும் எங்கள் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கலவரம்இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி முகிலன் மற்றும் சிலர் சேர்ந்து வாங்கலில் மணல் குவாரி அமையக்கூடாது என்று கூறி எங்கள் ஊரில் கூட்டம் நடத்தினர். எங்கள் ஊரில் பல சமுதாய மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த கூட்டம் நடத்தியதில் இருந்து ஊர் மக்களிடையே ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. இதனால் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களிடையே தேவையற்ற கலவரம் ஏற்படுகிறது. எனவே இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று வாங்கலில் விரைவில் மணல் குவாரி அமைக்கவும், தொடர்ந்து மணல் குவாரி செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.