பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம்: வங்கியை முற்றுகையிட முயன்ற வாடிக்கையாளர்கள்


பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம்: வங்கியை முற்றுகையிட முயன்ற வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-17T03:34:49+05:30)

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று காலை பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இது

உப்பிலியபுரம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று காலை பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், துறையூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், உப்பிலியபுரம் சப்–இன்ஸ்பெக்டர் செபஸ்தியான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வங்கி மேலாளர் செந்திலிடமும், வாடிக்கையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் செய்யும் முடிவை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story