திருவள்ளூர் அருகே வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


திருவள்ளூர் அருகே வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-17T03:45:45+05:30)

திருவள்ளூர் அருகே வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் இல்லை கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இந்த மாதம

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணம் இல்லை

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இந்த மாதம் 30–ந் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. அன்றைய தேதியில் இருந்து திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை எடுப்பதற்கும் அதிக அளவில் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கிக்கு காலை 10 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுக்க வந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள் தற்போது வங்கியில் பணம் இல்லை. எனவே பணத்தை எடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையான மணவாளநகர் சந்திப்பு சாலையருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story