சோழிங்கநல்லூரில் மின்சாரம் வழங்கக்கோரி சாலைமறியல்


சோழிங்கநல்லூரில் மின்சாரம் வழங்கக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:27 PM GMT (Updated: 16 Dec 2016 10:27 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் அதிக மழை பெய்த இடம் சோழிங்கநல்லூர் ஆகும். மரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்ததால் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆத

சோழிங்கநல்லூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் அதிக மழை பெய்த இடம் சோழிங்கநல்லூர் ஆகும். மரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்ததால் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பழைய மாமல்லபுரம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சோழிங்கநல்லூரில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story