அண்ணா திடலில் பொழுதுபோக்கு கண்காட்சி முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்


அண்ணா திடலில் பொழுதுபோக்கு கண்காட்சி முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-17T04:11:54+05:30)

புதுச்சேரி அண்ணா திடலில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொழுதுபோக்கு கண்காட்சி திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இந்த கண்காட்சியில் சிறுவர்– சிறுமிகளை மகி

புதுச்சேரி,

புதுச்சேரி அண்ணா திடலில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொழுதுபோக்கு கண்காட்சி திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.

இந்த கண்காட்சியில் சிறுவர்– சிறுமிகளை மகிழ்விக்கும் விதமாக ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டு எருமை, வரிக்குதிரை, டைனோசர், மலைப்பாம்பு, மான் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த விலங்குகளின் பின்னணியில் அதன் ஒலியும் எழுப்பப்படுகிறது. இது விலங்குகளை நேரில் பார்ப்பது போன்ற திகைப்பை உண்டாக்குகிறது.

இதுதவிர உணவு அரங்குகள், ஜெயண்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டேஸ்சிங் கார் (மோதும் கார்கள்), சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவையும் இடம்பெற்று உள்ளன.

பொழுதுபோக்கு கண்காட்சி திறப்பு விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சி தினமும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பந்தல் காண்டிராக்டர் ஆனந்து செய்து வருகிறார்.


Next Story