தாயைக் காப்பாற்றிய 3 வயது குழந்தை!


தாயைக் காப்பாற்றிய 3 வயது குழந்தை!
x
தினத்தந்தி 17 Dec 2016 12:19 PM GMT (Updated: 2016-12-17T17:48:58+05:30)

இங்கிலாந்தில், உயிருக்குப் போராடிய தாயைக் காப்பாற்றிய மூன்று வயது குழந்தை பலரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

ங்கிலாந்தில், உயிருக்குப் போராடிய தாயைக் காப்பாற்றிய மூன்று வயது குழந்தை பலரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இங்கிலாந்தின் கிளாக்டன் பகுதியைச் சேர்ந்த பேட்ரிசியா ஹன்னிங்டன் என்ற பெண்மணிக்கு சோபியா ஹார்மன் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் ஒருநாள், பேட்ரிசியா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, பேச முடியாமல், உயிருக்குப் போராடி இருக்கிறார்.

அம்மா நெஞ்சுவலியால் துடிப்பதைக் கண்ட மகள் சோபியா, உடனடியாக அவசர எண்ணான 999-ஐ தொடர்புகொண்டு தன் அம்மாவின் நிலைமையைப் பற்றிக் கூறியிருக்கிறாள்.

அதோடு, சற்றும் பதற்றப்படாமல் தன் வீட்டின் முகவரி, வீட்டுக்கு அருகில் என்னவெல்லாம் இருக்கும் என்பது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கூறியிருக்கிறாள்.

மேலும் தன் அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான பல கேள்விகளையும் கேட்டிருக் கிறாள்.

உடனே பேட்ரிசியாவின் வீட்டுக்கு விரைந்துவந்த டாக்டர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சைக்குப் பின் பேட்ரிசியா நலம் பெற்றிருக்கிறார்.

அவர் கூறும்போது, எந்த ஓர் அவசர உதவி என்றாலும் 999 எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும், உதாரணமாக தனக்கு நெஞ்சுவலி அபாயம் இருப்பதால், அதுபோன்ற சூழலில் நீ அந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும் என்றும் நான் என் மகளிடம் சொல்லியிருந்தேன். அதன்படியே அவள் மிகவும் சரியாகவும், பொறுப்பாகவும் செயல்பட்டிருக்கிறாள் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், சோபியாவையும் அவளது தாய் பேட்ரிசியாவையும் போலீசார் அழைத்து, சோபியாவுக்கு வீரச்செயலுக்கான சான்றிதழை அளித்துப் பாராட்டியிருக்கின்றனர்.

உண்மையிலேயே, இந்தக் குழந்தையைப் பெற்ற தாய் பெரும் பாக்கியசாலிதான்!

Next Story