ஓசூர் அருகே துணிகரம்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூர் அருகே துணிகரம்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-17T18:47:13+05:30)

ஓசூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆஞ்சநேயர் கோவில் ஓசூரில் தளி செல்லும் சாலையில் அம்பாள் நகர் பகுதியில் பக்த ஆஞ்சநேயர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்பாள்

மத்திகிரி,

ஓசூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆஞ்சநேயர் கோவில்

ஓசூரில் தளி செல்லும் சாலையில் அம்பாள் நகர் பகுதியில் பக்த ஆஞ்சநேயர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்பாள் நகர், விகாஸ் நகர், அப்பாவு நகர், தளி சாலை பகுதி பக்தர்கள் வந்து சாமியை வழிபடுவது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலின் பூசாரி சீனிவாசன் வழக்கம் போல பூஜைகளை முடித்து, இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் கோவிலுக்கு வந்த போது கோவிலின் பின்பகுதியில் உள்ள இரும்பு தகடு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இது குறித்து சீனிவாசன் அறநிலைய துறை செயல் அலுவலர் ராஜரத்தினத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story