ராதாபுரம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை


ராதாபுரம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2016 7:30 PM GMT (Updated: 2016-12-17T18:49:34+05:30)

ராதாபுரம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராதாபுரம்,

ராதாபுரம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் தொங்கிய நிலையில் பிணம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் லாசர். இவருக்கு சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கோலியான்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தை சீலாத்திகுளம் ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு ஒரு மரத்தில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் அந்த தோட்டத்திற்கு சிறிது தொலைவில் ஒரு சட்டை கிடந்துள்ளது. அதில் கிழிந்த ஒரே ஒரு 100 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து பிணத்தை மரத்தில் தொங்கியபடி விட்டுச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story