அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம்


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-17T18:57:47+05:30)

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனை கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஏ.கே.சுப்பிரமணியன் தலைமையில் க

கடலூர்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஏ.கே.சுப்பிரமணியன் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கோ.அய்யப்பன், நகர செயலாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைக்க வேண்டும், பாராளுமன்றத்தில் முழுஉருவ வெண்கலசிலை அமைக்க வேண்டும், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக, பாதுகாவலாக, வழிதுணையாக இருந்து துன்பங்களை எல்லாம் தாங்கி கொண்ட சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, அண்ணாதொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வம், நகர பேரவை துணை செயலாளர் ஆட்டோ இளங்கோ மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவை நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.


Next Story